கிளிநொச்சியில் எரிபொருளுக்காக நாள் முழுதும் பசியுடன் காத்திருந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்
அன்று மாலை ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 8மணிக்கு பின்னர் அவர் வீடு திரும்பியிருக்கின்றார்.
மறு நாள் 3ஆம் திகதி அதிகாலை கொழும்பிலிருந்து அரச பேருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தபோது வீதி ஓரத்தில் குறி்த்த நபர் வீழ்ந்து கிடந்ததை அவதானித்த அதன் சாரதியும் நடத்துனரும் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்திருக்கின்றர்.
அவர் மயங்கிக் காணப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
சிகிச்சை பலனின்றி அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவருடைய மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.
கிளிநொச்சியில் எரிபொருளுக்காக நாள் முழுதும் பசியுடன் காத்திருந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்
Reviewed by Author
on
April 08, 2022
Rating:

No comments:
Post a Comment