அண்மைய செய்திகள்

recent
-

பேருந்துக்கு தீ வைத்த நபர் குறித்த படம் வௌியீடு!

மிரிஹான பங்கிரிவத்தை வீதியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) மேற்கொண்டு வருகின்றது. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நாடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 அதன்படி, குறித்த சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொண்ட சிசிரிவி காட்சிகளுக்கு அமைய, பேருந்துக்கு தீ வைத்தவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் நபரின் படத்தையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் விசாரணைக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கைப்பேசி இலக்கமான 071 859 1755 அல்லது 071 859 4929 அழைத்து அறிவிக்குமாறும் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் 011 2444265 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பேருந்துக்கு தீ வைத்த நபர் குறித்த படம் வௌியீடு! Reviewed by Author on April 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.