நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயர்..!
அப்போது விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு விவேக் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி முதலமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வருகிற 3 ஆம் தேதி நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னக்கலைவாணர் விவேக் சாலை என பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விவேக் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயர்..!
Reviewed by Author
on
May 02, 2022
Rating:

No comments:
Post a Comment