யாழ்.மாநகரில் டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு!
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார். கடந்த 18ஆம்ம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டுவிட்டு இருந்துள்ளார்.
எனினும் 19ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டு மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
.
யாழ்.மாநகரில் டெங்கு காய்ச்சலினால் மாணவன் உயிரிழப்பு!
Reviewed by Author
on
May 22, 2022
Rating:

No comments:
Post a Comment