மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு!
அதேபோல மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுது.
இதேவேளை, மக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கும் செய்தியாக மே 6ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தால் அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.
இதேநேரம், தொழிற்சங்கப் பிரிவின்றி சுகாதார ஊழியர்களும் எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மேலும் தெரிவித்தார்.
மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு!
Reviewed by Author
on
May 03, 2022
Rating:
Reviewed by Author
on
May 03, 2022
Rating:


No comments:
Post a Comment