ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு
ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக நிர்வாக தெரிவு கூட்டமானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒட்டுசுட்டான் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் தலைவி ஜெ.தனுசியா அவர்களது தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ.ரமேஷ் ,முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
நிகழ்வில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உடைய உறுப்பினர்கள் ஆலோசகர்கள் இளைஞர் சேவை அதிகாரி உள்ளிட்டவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது
இளைஞர்களின் விளையாட்டு கல்வி கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சேவைகள் மன்றம் தன்னுடைய சேவைகளை ஆற்றி வருகின்றது அந்த சேவைகளை இலகுபடுத்தும் முகமாக கிராமங்கள் தோறும் இளைஞர் கழகங்களும் பிரதேச ரீதியாக இளைஞர் கழக பிரதேச சம்மேளனங்களும் மாவட்ட ரீதியாக இளைஞர் கழக மாவட்ட சம்மேளனமும் தேசிய ரீதியில் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமுன் என இளைஞர் கட்டமைப்புகளை கொண்டு இளைஞர்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
--
ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு
Reviewed by Author
on
May 10, 2022
Rating:
Reviewed by Author
on
May 10, 2022
Rating:
































No comments:
Post a Comment