13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு
இந்நிலையில் இன்று மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
மேலும், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
அதன் பின்னால் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் “ஐநா மன்றத்தில் இந்திய அரசு தலையிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும். மேலும், தமிழக முதல்வர் தமிழினத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராக அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யாரெல்லாம் கலந்து கொள்ளமாட்டார் என்று நினைத்தவர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் ஒரு துக்க நாளாக அறிவித்து அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார்.
13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு
Reviewed by Author
on
May 18, 2022
Rating:
Reviewed by Author
on
May 18, 2022
Rating:


No comments:
Post a Comment