இலங்கையில் நாள் ஒன்றுக்கு புகைத்தல் பாவனையின் காரணமாக உயிரிழக்கும் 50 பேர்!
புகைப் பொருள் பாவனையானது சூழலை மாசடையச்செய்யும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக, சிகரெட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன.
சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.
மேலும் வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றன. நாடு தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காணப்படும் இந்த தருணத்திலும் வீணாக சிகரெட்டிற்கு செலவழிக்கபடுவதால் எஞ்சி இருக்கின்ற டொலர்களும் வீணடிக்கப்படுகின்றன.
மேலும் சிகரெட் நிறுவனத்திடம் வரி அறவிடப்பட்டாலும் அந்த தொகையையும் விட பாரிய தொகை புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களிற்கு செலவிடப்படுகிறது.
அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்த போதிலும் சிகரெட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சிகரெட் விலை அதிகரிகரிக்கப்படவில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாள் ஒன்றுக்கு புகைத்தல் பாவனையின் காரணமாக உயிரிழக்கும் 50 பேர்!
Reviewed by Author
on
May 28, 2022
Rating:
Reviewed by Author
on
May 28, 2022
Rating:


No comments:
Post a Comment