மே 31 வரை மட்டுமே கட்டுநாயக்கவில் விமான எரிபொருள் உள்ளது - விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி
இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னை திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 31 வரை மட்டுமே கட்டுநாயக்கவில் விமான எரிபொருள் உள்ளது - விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி
Reviewed by Author
on
May 25, 2022
Rating:
Reviewed by Author
on
May 25, 2022
Rating:


No comments:
Post a Comment