அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை?

 முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் 06.06.2022 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.


செம்மலையினை சேர்ந்த 41 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் அளம்பில் பகுதியில் வீட்டில் தந்தையுடன் வசித்து வந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்று (06) இரவு வீட்டிற்கு சென்ற இருவர் குறித்த நபரை அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இதன்போது தலையில் படுகாயமடைந்த குறித்த நபர்   நிலத்தில் வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.


வீட்டில் இவரும் இவரது தந்தையுமே வசித்து வந்துள்ளார்கள் இந்த சம்பவத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் உடலம் மீட்கப்பட்டு பிரோத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றார்கள்.











முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை? Reviewed by Admin on June 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.