மன்னாரில் அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு
குறிப்பாக வெள்ளை நாடு 220 ரூபாய்க்கும் , சிவப்புபச்சை 210 ரூபாய்க்கும், சம்பா 230 ரூபாய்க்கும் ,வெள்ளப்பச்சை 220 ரூபாய்க்கும், விற்பனை செய்யும்படி அரசாங்கத்தினால் விலை நிர்ணயிக்க பட்டுள்ள நிலையில் குறித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது ஒரு லட்சம் தொடக்கம் ஐந்து லட்சம் வரை அபராதமும் மொத்த வியாபார நிலையங்களுக்கு ஐந்து லட்சம் தொடக்கம் ஐம்பது லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விசேட ரோந்து நடவடிக்கை மன்னார் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதுடன் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் மீதும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபையில் பொதுமக்கள் நேரடியாக முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு
Reviewed by Author
on
June 13, 2022
Rating:

No comments:
Post a Comment