வயோதிப தாய் பஸ்ஸில் தொலைத்த பணத்தை மீட்டுக் கொடுத்த யாழ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார்
அதனை அடுத்து அந்த மூதாட்டியின் அடையா அட்டையை வாங்கிக்கொண்டு, முச்சக்கர வண்டியில் தம்மை பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு பொலிஸார் பஸ்ஸினை துரத்தி சென்று , கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் வழிமறித்து , மூதாட்டியின் பணம் காணாமல் போனமை தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
யாழ் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்ட பெரும் தொகை பணம்!
அதன் பின்னர் பஸ் நடத்துனரின் உதவியுடன் , பஸ்ஸை சோதனையிட்டனர்.பணத்தினை காணாத நிலையில் , பயணிகளை சோதனையிட போவதாக கூறி , ஒரு சில பயணிகளை பஸ்ஸில் இருந்து இறக்கி சோதனையிட்ட போது , பஸ்ஸினுள் பணம் கிடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
பேருந்தின் இருக்கை ஒன்றின் கீழ் இருந்து பணத்தினை பொலிஸார் மீட்டனர். அதில் 7 ஆயிரம் ரூபாய் குறைவாக 89ஆயிரம் ரூபாய் பணமே காணப்பட்டது.
யாழ் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்ட பெரும் தொகை பணம்!
அதேசமயம் அங்கு வந்திருந்த பணத்தினை தவறவிட்ட மூதாட்டி , இந்த பணம் கிடைத்ததே பெரிய விடயம் என கூறி பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த நிலையில் பஸ்ஸில் பயணித்த பயணிகளும் பொலிஸாருக்கு நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்தனர்.
வயோதிப தாய் பஸ்ஸில் தொலைத்த பணத்தை மீட்டுக் கொடுத்த யாழ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார்
Reviewed by Author
on
June 23, 2022
Rating:

No comments:
Post a Comment