மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கை
எனினும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 75 நாட்களுக்கு பின்னர் தேவைப்படும் நிலக்கரி உள்ளதா என்பதிலும் பிரச்சினை உருவாகியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள இதுவரை முன்பதிவு செய்யப்படவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த காலத்திற்கு 22 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதுடன், அதன் பொருட்டு 610 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகின்றது.
இந்த பணம் இதுவரை திரட்டப்படவில்லை என தெரிவித்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், குறித்த பணத்தை திரட்ட முடியவில்லையாயின், மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கை
Reviewed by Author
on
June 23, 2022
Rating:

No comments:
Post a Comment