அண்மைய செய்திகள்

recent
-

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தீர்த்தம் எடுத்தல் உற்சவம்

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உட்சவம் இன்று மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 30.05.2022 திங்களன்று பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது 

அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகை தாய்க்கான விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெற்று இருந்தது அந்த வகையில் இன்று மாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி பறை வாத்தியம் முழங்க அடியவர்கள் புடைசூழ பாரம்பரிய வீதிகள் வழியாகச் சென்று தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது

 2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டுத்தாக்குதல் காரணமாகவும் 2020 ஆம் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாகவும் இந்த தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பங்கு பற்றிருந்த நிலைமையிலே இவ்வாண்டு அதிகளவான பக்தர்கள் புடைசூழ அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி தாய்க்கான உப்பு நீரில் விளக்கெரியும் அந்த அரிய நிகழ்விற்காக தீர்த்தம் எடுக்கின்ற வைபவம் மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது 

 பெருங்கடலில் எடுக்கப்பட்ட தீர்த்தமானது வருகை தந்த அதே பாதைகள் ஊடாக காட்டா விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது இன்றிரவு அங்கு உப்பு நீரில் விளக்கேற்றும் அரிய காட்சி இடம்பெறும் அதனை தொடர்ந்து காட்டா விநாயகர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று எதிர்வரும் திங்கட்கிழமை 13.6. 2002 அன்று அதிகாலையில் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை இன்றைய தீர்த்தம் எடுக்கும் நிகழ்விற்கு அதிகளவான இராணுவத்தினர் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

-S.THAVASEELAN-















வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தீர்த்தம் எடுத்தல் உற்சவம் Reviewed by Author on June 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.