காதலியை கொன்ற காதலன்: தலையுடன் போலீசில் சரண்
அடிக்கடி இருவரும் சந்தித்து பழகி வந்தனர்.இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண் கூறியுள்ளார். ஆனால், மூன்று மாதங்களுக்கு முன், காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
'என்னை ஏமாற்றி விட்டாயே' என்று, அந்த வாலிபரிடம் அடிக்கடி காதலி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில், நிர்மலா நேற்று தன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் திடீரென புகுந்த போஜராஜு, கத்தியால் நிர்மலா கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின், நிர்மலா தலையை தனியாக துண்டித்து எடுத்தவர், கானஹொசஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு தலையுடன் சென்று சரணடைந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை கொன்ற காதலன்: தலையுடன் போலீசில் சரண்
Reviewed by Author
on
July 22, 2022
Rating:

No comments:
Post a Comment