ஜனாதிபதி தெரிவிற்கு ஜூலை 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல்
இன்று முதல் 7 நாட்களுக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதனால், எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாக உள்ள ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு புதிய ஜனாதிபதி ஒருவரை ஒரு மாதத்திற்குள் தெரிவு செய்ய வேண்டும் என்பதுடன், அதனை இரகசிய வாக்கெடுப்பு மூலமே மேற்கொள்ள வேண்டும்.
இந்த வாக்களிப்பின் போது சபாநாயகரும் வாக்களிக்க முடியும்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படுவார்.
வேட்புமனு கையளிக்கப்படும் தினத்தில் அந்த வேட்பாளர் அன்றைய தினம் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டும்.
ஒருவருடை பெயர் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டால் வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும்.
ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அதன் பிரகாரம், எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவிற்கு ஜூலை 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல்
Reviewed by Author
on
July 16, 2022
Rating:

No comments:
Post a Comment