அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இன்றைய தினம் லிட்ரோ எரிவாயு ( LITRO GAS) விநியோகம்

மன்னாரில் இன்றைய தினம் வியாழக்கிழமை (14)காலை தொடக்கம் லிட்ரோ எரிவாயு ( LITRO GAS) வழங்குவதற்கான நடவடிக்கைகள் மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் உள்ள முகவர்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து எரிவாயு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன விநியோகத்தர்கள் தெரிவித்திருந்தனர். 

 அதற்கு அமைவாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு குடும்ப அட்டைகளின் படி இன்றைய தினம் விநியோகம் இடம் பெற்றது. முதல் கட்டமாக 900 எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாறு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் எரிவாயுவை பெற்றுகொள்ள முடியாதவர்களுக்கு விரைவில் உள்ளூர் முகவர்கள் ஊடாக எரிவாயு விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .



 
மன்னாரில் இன்றைய தினம் லிட்ரோ எரிவாயு ( LITRO GAS) விநியோகம் Reviewed by Author on July 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.