ஈழ அரசியல் குறித்து சீமான் மீது ராமநாதன் அர்ச்சுனாவின் கடும் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈழ மக்களின் வலியும் போராட்டத்தையும் தனது சுய அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் வாக்குகளுக்காக எங்கும் ஈழ மக்களின் வலியை பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராமேஸ்வரத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்து உதவாத சீமான், புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ளதாகவும் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார்.
சீமானின் செயற்பாடுகள் காரணமாக யாழ்ப்பாண மக்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பதால் தான் அவரை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகத் தமிழர்களுக்கான தலைமைத்துவத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சீமான் ஒருபோதும் நிரப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விஜய், அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய சாத்தியம் கொண்டவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், ஈழ மக்களுக்காக விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதையே அடிப்படையாகக் கொண்டு உலகத் தமிழர்கள் அவரை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
May 16, 2026
Rating:


No comments:
Post a Comment