இன்று அதிகாலை 5 மணியுடன் நாடளாவிய ஊரடங்கு நீக்கம்
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் சேவைகள் இன்று(14) வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று(14) அதிகாலை 5 மணி முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகியதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர குறிப்பிட்டார்.
இதனிடையே, பஸ் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தனியார் பஸ்கள் இன்றைய தினமும் குறைந்தளவிலேயே சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5 மணியுடன் நாடளாவிய ஊரடங்கு நீக்கம்
Reviewed by Author
on
July 14, 2022
Rating:
Reviewed by Author
on
July 14, 2022
Rating:


No comments:
Post a Comment