அண்மைய செய்திகள்

recent
-

புஸல்லாவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு- ஆத்திரமடைந்த மக்கள் பேருந்துக்கு தீ வைப்பு!

புஸல்லாவை, காச்சாமலை வீடன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் விபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸையும் தீயிட்டு கொளுத்தியுள்ளமையினால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

 இதில் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் 39 வயதுடைய சுரேன்ஜித் புஸ்பகுமார் மற்றும் ஹெல்போட 7 ஆம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய விஜயகுமார் கவிஸகர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சுமார் 80 பேர் வரை குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளனர், அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டே பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

 இந்த விபத்தில் சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெரட்டாசி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



புஸல்லாவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு- ஆத்திரமடைந்த மக்கள் பேருந்துக்கு தீ வைப்பு! Reviewed by Author on July 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.