தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த 6 இலங்கையர்கள் மீட்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் நேற்று (10) இரவு இலங்கை வவுனியா மாவட்டம் பறையாளங்குளம் பகுதியை சேர்ந்த பாலசுகந்தன், அனுஜா,லிங்கேஸ்வரன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் ஒரு படகில் புறப்பட்டு இன்று (11) காலை சுமார் 5 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில்; வந்திறங்கினர்.
இதையடுத்து ராமேஸ்வரம் மரைன் போலீசார் மண்டபம் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் குழந்தைகளுடன் பல மணி நேரம் மணல் திட்டில் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் பத்திரமாக மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது.
விலைவாசி ஒரு பக்கம் உயர்வு,மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.
எனவே பட்டிணி சாவில் இருந்து உயிரை காப்பற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து உள்ளனர்.
மேலும் தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், பல மணி நேரம் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த உடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் எங்களை போலீசார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர்.
கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக வந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 109 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த 6 இலங்கையர்கள் மீட்பு!
Reviewed by Author
on
July 11, 2022
Rating:
Reviewed by Author
on
July 11, 2022
Rating:



No comments:
Post a Comment