மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணிக்கு தேவையான எரி பொருளை வழங்க கோரி குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதார சேவைகளை தரம் தாழ்த்தி பார்ப்பது ஏன்?,பெட்ரோல் பங்கீட்டில் உள்ளூராட்சி சேவைகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?,தின்மக் கழிவகற்றல் சேவை அத்தியாவசிய சேவை என்று தெரியாதா அரச அதிபரே?உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.
மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்.
Reviewed by Author
on
July 04, 2022
Rating:

No comments:
Post a Comment