முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் உள்நாட்டுப் போரின் போது செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்யுமாறு கோரி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறியதாக முறைப்பாட்டைத் தாக்கல் செய்த "சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்" என்ற குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் முறைப்பாடு!
Reviewed by Author
on
July 24, 2022
Rating:
Reviewed by Author
on
July 24, 2022
Rating:


No comments:
Post a Comment