நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 9 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது .
அதற்கு அமைவாக வங்காலை கிழக்கு , தோமஸ்புரி ,நறுவிலிக்குளம்,வஞ்சியன்குளம்,உமனகரி ,அச்சங்குளம்,இராசமடு ,இலந்தைமோட்டை ,செட்டியார் கட்டையடம்பன் ஆகிய 9 கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த எரிபொருள் அட்டையை பெற்றுக் கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு இன்றைய தினம் புதன் கிழமை (6) காலை முதல் மாலை வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது.
இராணுவம்,கடற்படை ,பொலிஸ்,கிராம அலுவலர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த 9 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த வாகன உரிமையாளர்களின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஏனைய கிராமங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீ ஸ்கந்தகுமார் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோக அட்டை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலினால் அறிமுகப்படுத்தப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 9 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது .
Reviewed by Author
on
July 06, 2022
Rating:
Reviewed by Author
on
July 06, 2022
Rating:




No comments:
Post a Comment