லண்டன் கனக துர்க்கை அம்மனின் பெரும் பணி திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு புத்தம்புதிய TRACTOR வண்டி ! இன்று கையளிப்பு ! !
யுத்த அனர்த்தங்களைத்தொடர்ந்து கேதீஸ்வர ஆலயத்தின் பெரும்
சொத்துக்கள் பல அழிக்கப்பட்டும், சில களவாடப்பட்டும் இருந்தன.இதனால்
பார ஊர்தியின்றி, பொருட்களை ஏற்ற, இறக்கம் செய்வதற்கு அந்த ஆலயம்
பல இடர்ப்பாடுகளுக்கு முகம் கொடுத்தது.அரசியல் நெருக்கடி, மக்கள்
இடர்ப்பெயர்வு, ஆலயப்புனருத்தாரணம் ஆகியவற்றால் பணமுடை பெரும்
சங்கடத்தை அங்கே தோற்றுவித்தது. திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச்
சொந்தமான தென்னம் தோட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தாலும்,
சில பக்தர்களின் காணிக்கையாலுமே செலவுகளை ஓரளவு சமாளிக்கக்
கூடியதாக இருந்ததாக நாங்கள் அறிந்து விசனப்பட்டோம்.
கேதீஸ்வர ஆலயம் இந்திய அரசின் பெரும் உதவியுடனும், சில நன்கொடை
யாளர்களின் வள்ளல்தன்மையாலும் இன்று புதுப்பொலிவுகொண்டு
விளங்குகின்றது.ஆயினும் சில அத்தியாவசிய சேவைகளும், அவற்றை
நடாத்துவதற்கேற்ற சாதனங்களுமின்றி பெரும் சிரமப்படுவதாலேதான்,
திருப்பணிச்சபையின் வேண்டுகோளையேற்று, கனக துர்க்காவின்கடைக்
கண்பார்வையில் நாங்கள் கரம்நீட்டியிருக்கிறோம்.
இந்த வண்டி கேதீஸ்வர ஆலயத்தின் ச்மூக சேவைகளுக்கு மிகவும் ஒத்தாசை
புரியும்.குறிப்பாக உணவுப்பொருட்கள் காவிவரவும், கழிவுப்பொருட்களை
அகற்றவும், பொருட்களைச்சந்தைப்படுத்தவும், ஆலயப்பாடசாலை மாணாக்க
ருக்கு சிறுதூரப்போக்குவரவுக்கும் மிக உதவியாய் இருக்கும் என்றும்
எமக்கு அறியத்தந்துள்ளனர்.
இன்று நடைபெற்ற இக்கையளிப்பு விழாவில், கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
சார்பாக இங்கிருந்து குடமுழுக்கு விழாக்காணச்சென்ற அடியார்களான
சட்டத்தரணி இரத்தினசிங்கம் தம்பதிகள், பரமகுமார் தம்பதிகள்,திரு கணேஸ்
குமார் ஆகியோருடன், கனக துர்க்கா ஆலயத்தின் வண. பராபரசிவாச்சாரியாரும்
பங்கெடுத்தனர்.
கேதீஸ்வர ஆலயத்திருப்பணிச்சபையின் சார்பில் திரு
நடேசானந்தன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஆகியோர் இதில்
கலந்துசிறப்பித்தனர்.
புதிய TRACTOR வண்டியானது கனகதுர்க்கை ஆலயத்தால், வவுனியாவில்
கொள்வனவு செய்யப்பட்டது.இந்த வண்டியை வவுனியாவில் இருந்து
மன்னார் மாதோட்டத்திற்கு எடுத்துச்சென்ற பொறுப்பை ஏற்று,உதவிய
வவுனியா அகிலாண்டேஸ்வரி சிறுவர் மறுவாழ்வு மையத்தைச்சேர்ந்த திரு
அன்னலிங்கம் அவர்களுக்கு அம்பிகை கடாட்சம் உரித்தாகுக
.
ச.சிறி ரங்கன்
லண்டன் கனக துர்க்கை அம்மனின் பெரும் பணி திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு புத்தம்புதிய TRACTOR வண்டி ! இன்று கையளிப்பு ! !
Reviewed by Author
on
July 06, 2022
Rating:
Reviewed by Author
on
July 06, 2022
Rating:











.jpg)

No comments:
Post a Comment