அண்மைய செய்திகள்

recent
-

பணவீக்க சுட்டெண்ணில் மூன்றாவது இடத்தில் இலங்கை

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பணவீக்க அறிக்கையின் பிரகாரம் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நேற்று (11) வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, பணவீக்கக் குறிகாட்டியில் சிம்பாப்வே முதல் இடத்தில் இருக்கும் அதே வேளை துருக்கி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

 ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்கக் குறியீடு, உலகப் பொருளாதார நிலைமை குறித்து மாதந்தோறும் வெளியிடப்படுகிறது, இது உலகின் முக்கிய பணவீக்க பகுப்பாய்வு அளவுகோலாகக் கருதப்படுகிறது. அதன்படி வெனிசுலா நான்காவது இடத்திலும், லெபனான் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 12ஆவது இடத்திலும் உள்ளன.


பணவீக்க சுட்டெண்ணில் மூன்றாவது இடத்தில் இலங்கை Reviewed by Author on July 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.