அண்மைய செய்திகள்

recent
-

கடல் மாசுபாடு மற்றும் அந்நிய ஊடுருவல் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாய்மரப்படகில் சாகசப் பயணம்

கடல் மாசுபாடு மற்றும் அந்நிய ஊடுருவல் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாய்மர படகில் தமிழக கடலோர பாதுகாப்பு குழு போலீசார் சாகச பயணம் மேற்கொண்டு மண்டபம் வந்தடைந்தனர். தமிழக கடலோர பாதுகாப்பு குழு மற்றும் ராயல் மெட்ராஸ் யாட்ச் சங்கம் இணைந்து, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாம் வரை 510 நாட்டிக்கல் மைல் தூரம் பாய்மர படகில் தமிழக கடலோர பாதுகாப்பு குழு போலீசார் பயணம் செய்து மண்டபம் வந்தடைந்தனர். நாளை மீண்டும் கடல் வழியாக பாய்மர படகு மூலம் சென்னை செல்கின்றனர். 

 தமிழக கிழக்கு பாக்ஜலசந்தி கடலோரப் பகுதிகளில் அந்நிய ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு குறைபாடு உள்ள இறங்கு தளங்களின் விவரங்கள் சேகரிக்கவும், கடல் மாசுபாட்டை தடுக்கவும், மீனவர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திட சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் சாகச பாய்மர படகு பயணத்தை கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து டி.ஜி.பி.இ சைலேந்திர பாபு துவக்கி வைத்தார். இந்த சாகச பயணத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 12 பேர் அடங்கிய குழுவினர் 2 பாய்மர படகில் பயணம் மேற்கொண்டனர்.

 மீனவ மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து பாய்மர படகில் புறப்பட்ட இந்த குழு காரைக்கால் துறைமுகம், நாகை, முத்துப்பேட்டை வழியாக இந்த குழு 480 நாட்டிக்கல் தூரம் சாகச பயணம் மேற்கொண்டு இன்று ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்துள்ள பிரப்பன்வலசை கடற்கரைக்கு வந்தடைந்தது. பாய்மர படகு பயணக் குழுவினருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்.பி.இ சக்தி கணேசன்இமற்றும் மரைன் போலீசார் கொடியசைத்து மீண்டும் பயணத்தை துவங்கி வைத்தனர். இக்குழு 20 நாட்டிக்கல் தூரம் பயணித்து மொத்தமாக 510 நாட்டிகல் துராம் பயணித்து அவர்களது இலக்கான ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாம் கடற்கரைக்கு வந்து பயணத்தை நிறைவு செய்தனர். இக்குழு நான்கு நாட்கள் பயணித்து சென்னையில் இருந்து இன்று மண்டபம் வந்தடைந்துள்ள நிலையில் மீண்டும் நாளை மண்டபத்தில் இருந்து கடல் வழியாக பாய்மர படகில் புறப்பட்டு மூன்று நாட்களில் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளனர்.









கடல் மாசுபாடு மற்றும் அந்நிய ஊடுருவல் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாய்மரப்படகில் சாகசப் பயணம் Reviewed by Author on July 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.