அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் புரியாணியுடன் கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியுடன் கோழிப் புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளாரை, எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் விடுவித்துள்ளார். குறித்த உணவகத்தில் மட்டு. போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள், சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை (30) விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப் புரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர். 

 அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பெரித்த நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து, மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன், உணவக உரிமையாளரை கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். இதன்போதே, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். இதேவேளை, நகர்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களை பொதுச் சுகாதார அதிகாரிகள் நேற்று முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்போது பாவனைக்கு உதவாத அரிசி மூடைகள் 25 ஐ கைப்பற்றியதுடன், சுகாதாரமில்லாத பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் புரியாணியுடன் கரப்பான் பூச்சி Reviewed by Author on August 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.