அண்மைய செய்திகள்

recent
-

காற்றாலை மற்றும் மணல் அகழ்வு மன்னார் தீவுக்குள் வேண்டாம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இடம் பெற்றுவரும் கணிய மணல் அகழ்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைக்கு எதிராக பேசாலை பகுதியில் இடம் பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும் பேசாலை பங்குத்தந்தையுமாகிய அருட்தந்த ஞானப்பிரகாஸம் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த போராட்டம் ஏன் நடைபெறுகிறது என்று சொன்னால் மிக முக்கியமாக மணல் அகழ்வு காற்றாலை நிர்மாணித்தல் இந்த ரெண்டு விடயங்களும் இந்த தீவுப் பகுதிகள் நடைபெறக்கூடாது என்பதுதான் மக்களுடைய வேண்டுகோளாக இருக்கின்றது 

 மக்களுடைய எதிர்காலம் எதிர்கால சந்ததியினுடைய எதிர்காலம் இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலை செயற்திட்டங்களால் பாதிப்படைகின்றது அதே நேரம் இந்த திட்டங்களால் மக்களின் தொழில் வாய்ப்பு இல்லாமல் போகிறது வாழ்வாதாரம் இல்லாமல் போகிறது மீன் வளம் இல்லாமல் போகின்றது மணல் அகழ்வையும் காற்றாலை மின்செய்திட்டத்தையும் இந்த தீவுக்குள் செயல்படுத்த வேண்டாம் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது இதை உரியவர்களும் அரசாங்கமும் செவிசாய்த்து இந்த மக்களுக்கு ஒரு வாழ்வை கொடுக்க வேண்டும் இந்தப் போராட்டம் இன்று பேசாலையில் இடம் பெற்றது 

தலைமன்னார் தொடக்கம் இருக்கக்கூடிய கிராமங்கள் மற்றும் சிறு தோப்பு வரை இருக்கக்கூடிய கிராமங்களில் இருந்து மக்கள் வந்து இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் மிகவும் அமைதியான போராட்டமாக இது நடைபெற்றது இவ்வளவு மக்கள் ஒன்று கூடி பிரதேச சபைக்கு சென்ற பொழுதும் பிரதேச சபை தவிசாளர் அங்கு இல்லாது மறைந்திருந்தது எங்களுக்கு மிகவும் கவலையை தருகின்றது இத்தனை பேருடைய உணர்வுகளையும் மதிக்காது அவர் நடந்திருக்கின்றார் ஆகவே இந்த உயர் அதிகாரிகளுடைய அசம்பந்தபோக்கு தொடர்கின்றபொழுது மக்கள் எல்லோருடைய அழிவும் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது ஆகையினாலே இதைத் தொடர்ந்து நாங்கள் வருகிறன்ற திங்கட்கிழமை மன்னார் பகுதியிலே மாபெரும் ஒரு விழிப்புணர்வு ஒன்று கூடல் மற்றும் போராட்டத்தை நடத்தவிருக்கின்றோம் அந்த விழிப்புணர்வு போராட்டத்திலே மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் இந்த தீவில் இருக்கின்ற அனைவரையும் உங்களை அன்போடு அழைக்கின்றோம் 

 இன்று நாங்கள் கொடுத்த மகஜருக்கு சம்மந்தப்ப்ட்டவர்கள் உரிய பதில் இந்த இரண்டொரு நாட்களில் கிடைக்காவிட்டால் நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக மக்கள் தீர்மானித்திருக்கின்றார்கள். ஆகையினாலே இந்த உயர் அதிகாரிகளுடைய அசம்பந்த போக்கை வன்மையாக கண்டிப்பதோடு அவர்கள் மக்களுக்காக இருக்கிறார்களா என்ற பெரிய கேள்விக்குறி எங்களுக்கு எழுகின்றது? அதனால் இதை மனதில் கொண்டு தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற இந்த போராட்டங்களிலே மக்கள் நிறைவாக கலந்து கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம் அதே நேரம் இன்று மன்னார் பிரதேச சபையிலே நடந்த சம்பவம் மிகவும் மன வருத்தத்துக்குரியது தவிசாளர் எங்களை சந்திக்காது மக்களை சந்திக்காது அவர்களிடமிருந்து இந்த மகஜரை பெறாதது கண்டிக்கத்தக்கது இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை நடைபெறுகின்ற இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரித்தார்





காற்றாலை மற்றும் மணல் அகழ்வு மன்னார் தீவுக்குள் வேண்டாம் Reviewed by Author on August 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.