அனைத்து அறவழி போராட்டகாரர்களையும் உடனடியாக விடுதலை செய்க-மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்
குறித்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவர்கள் வவுனியா,கிளிநொச்சி,முல்லைதீவு,மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பெண்கள் குழுக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் மன்னார் மெசிடோ நிறுவன அதிகாரிகள்,பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அனைத்து அறவழி போராட்டக்காரர்களும் உடனடியாக விடுதலை செய்க,மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிப்பதற்கு என தயாரிக்கப்பட்ட பொது மகஜரும் போராட்டத்தின் போது வாசிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து அறவழி போராட்டகாரர்களையும் உடனடியாக விடுதலை செய்க-மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
August 21, 2022
Rating:

No comments:
Post a Comment