புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்று வைபவ ரீதியாக ஆரம்பம்
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக பாராளுமன்ற முன்றலில் முப்படையினரும் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையளிக்கவுள்ளனர். இதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என்பதுடன், தேசியக் கொடி மாத்திரம் ஏற்றிவைக்கப்படும்.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெறும். மேலும் இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலட்சினைக்குப் பதிலாக, அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்று வைபவ ரீதியாக ஆரம்பம்
Reviewed by Author
on
August 03, 2022
Rating:

No comments:
Post a Comment