ஈஸ்டர் குண்டு தாக்குதலின் போது மன்னாரில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை
இந்த நிலையில் இருவரையும் விடுவிக்க கோரி அல்லது பொலிஸார் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சட்டத்தரணி எஸ்.டினேசன் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பனங்கள் மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட காலமாக அவர்களுக்கு பிணை நிராகரிக்கப்பட்டு இருந்ததுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அவர்களை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்த தோடு நேரடியாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த வழக்கு காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய தயார் நிலையில் இருந்த பொழுது குறித்த வழக்கு தொடர்பான விபரங்களை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான கடிதத்தை மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு நேற்று முன்தினம் தினம்(4) வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(5) குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இருவரையும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதலின் போது மன்னாரில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை
Reviewed by Author
on
August 06, 2022
Rating:

No comments:
Post a Comment