7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை
அப்போது அவர்கள் நெருங்கி பழகி இருக்கிறார்கள். இதில் சக்தி கர்ப்பமானார். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜியிடம் சக்தி கூறியுள்ளார். அதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது என்றும், தற்போதுள்ள நிலைமையில் வளைகாப்பு நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சக்தி பிணமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன. இதனிடையே வேலைக்கு சென்று இருந்த அவரது தாய் லதா வீட்டுக்கு வந்தார். அங்கு தனது மகள் இறந்து கிடந்தை கண்டு கதறி அழுதார். இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சக்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சக்தியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.
அதன்பேரில் அற்புதராஜைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து அவர் பொலிஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது மனைவி சக்தி வளைகாப்பு நடத்த வேண்டும் என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டில் கிடந்த கரண்டியால் தாக்கினேன். அதில் அவர் மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரத்தில், அவரது கழுத்து, முகம் ஆகிய பகுதியில் கைகளால் குத்தி விட்டு வீட்டில் இருந்து மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்று விட்டேன்.
இதன் பின்னர் 3 முறை வீட்டுக்கு வந்து சக்திக்கு என்ன நேர்ந்தது என்று பார்த்தேன். ஆனால் அவள் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்தாள்.
இதையடுத்து வேலைக்கு சென்றுள்ள எனது மாமியாருக்கு போன் செய்து, உங்களது மகளுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது. எனவே நீங்கள் சென்று பாருங்கள் என்று கூறினேன்.
அதன்பேரில் மாமியார் லதா அங்கு சென்று பார்த்தார். பின்னர், அவர் எனக்கு போன் செய்து சக்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதன் பின்னர், நான் எதுவும் தெரியாதது போல் நடித்து, வீட்டுக்கு வந்து எனது மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுத்தேன். ஆனால் பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இவ் விடையம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது
7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை
Reviewed by Author
on
August 26, 2022
Rating:

No comments:
Post a Comment