அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற கலாசார ஒன்றினைவு நிகழ்வு

பன்மைத்துவ கலாசார ஒன்றினைவு மூலம் மத நல்லிணக்கத்தினை வலுப்படுத்தலும் மரபுரிமையை போற்றுதலும் எனும் தொணிப்பொருளில் மன்னார் ACG Group மற்றும் விழுது அமைப்பு ஏற்பாடு செய்த பாரம்பரிய உணவு மற்றும் கலாச்சார நிகழ்வு இன்று புதன்கிழமை காலை ஆண்டாங்குளம் பிள்ளையார் பிட்டி பகுதியில் விழுது அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஜெபநாதன் டலிமா தலைமையில் இடம் பெற்றது மத ரீதியாக இன ரீதியாக காணப்படும் கலாச்சாரம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை பொதுமைபடுத்துவதின் ஊடாக வன்முறை அற்ற ஒரு சமூகத்தை நோக்கி பயணிக்க கூடிய வகையில் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது 

 குறித்த நிகழ்வில் ஆண்டாங்குளம் கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்குத்தந்தை மற்றும் மூன்று மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் ஒவ்வொருவரும் தங்கள் மதம் சார்ந்த உணவுகளை வீட்டில் இருந்து தயாரித்து வந்ததுடன் ஏனைய மதத்தினருடன் பகிர்ந்து உண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது குறித்த செயல்திட்டத்தின் ஊடாக கடந்த வாரங்களில் மன்னார் மாவட்ட பிரதான பாலத்தில் சிரமதான பணி இடம் பெற்றதுடன் கண்டல் தாவரங்களும் நாட்டப்பட்டது மற்றும் ஆண்டாங்குளம் கார்மேல் கன்னியர் மடத்தில் உள்ள சிறுவர்களுக்கு "விழுமிய பண்புகளில் வளருவோம் கவலைகள் அனைத்தும் மறந்து " என்னும் தொனிப்பொருளில் விழுமிய கலந்துரையாடலும் மகிழ்வூட்டல் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடதக்கது











மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற கலாசார ஒன்றினைவு நிகழ்வு Reviewed by Author on August 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.