குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் நேற்று (03) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழியோடிகள் மூலம் மீட்கப்பட்ட சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த முதலாம் திகதி இரவு எட்டு மணியளவில் ஹட்டன் நகரிலிருந்து இரண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களையும் ஹட்டன் பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
August 04, 2022
Rating:
Reviewed by Author
on
August 04, 2022
Rating:


No comments:
Post a Comment