அண்மைய செய்திகள்

  
-

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று(08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 37 இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது பதவியேற்றுள்ளனர்.

 ⭕ வர்த்தக இராஜாங்க அமைச்சராக எஸ். வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். 

 ⭕ சிவனேசதுரை சந்திரகாந்தன் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். 

 ⭕ கல்வி இராஜாங்க அமைச்சராக அரவிந்த குமார் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். 

 ⭕ கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார். 

 ⭕ உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் இன்று(08) பதவிப் பிரமாணம் செய்துள்ளார். 

 ஏனைய 32 இராஜாங்க அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல்: 

 1. ரஞ்சித் சியம்பலாபிட்டி – நிதி 

 2. லசந்த அழகியவண்ண – போக்குவரத்து

 3. திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு 

 4. கனக ஹேரத் – தொழில்நுட்பம் 

5. ஜனக்க வக்கும்பர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் 

 6. செஹான் சேமசிங்க – நிதி 

 7. மொஹான் பிரியதர்ஷன யாப்பா – விவசாயம் 

 8. தேனுக்க விதான கமகே – நகர அபிவிருத்தி 

 9. பிரனித்த பண்டார தென்னக்கோன் – பாதுகாப்பு 

 10. ரோஹண திசாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

 11. அருந்திக்க பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி 

 12. விஜித்த பேருகொட – பிரிவெனா கல்வி 

 13. லொஹான் ரத்வத்தே – பெருந்தோட்ட கைத்தொழில் 

 14. தாரக்க பாலசூரிய – வௌிவிவகாரம் 

 15. ஜகத் புஷ்ப குமார – வௌிநாட்டு வேலைவாய்ப்பு 

 16. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் 

 17. சிறிபால கம்லத் – பெருந்தெருக்கள் 

 18. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி 

 19. சாந்த பண்டார – ஊடகத்துறை 

 20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம் 

 21. அனூப பஸ்குவல் – சமூக வலுவூட்டல் 

 22. சிசிர ஜயகொடி – உள்நாட்டு மருத்துவம் 

 23. பியல் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் 

 24. பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சி 

 25. D.V.சானக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு 

 26. D.B.ஹேரத் – கால்நடைகள் அபிவிருத்தி

 27. சஷீந்திர ராஜபக்ஸ – நீர்ப்பாசனம் 

28. சீதா அரம்பேபொல – சுகாதாரம் 

29. சாமர சம்பத் தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில் 

 30. அசோக்க பிரியந்த – உள்நாட்டலுவல்கள் 

 31. டயனா கமகே – சுற்றுலாத்துறை 

 32. கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்


புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் Reviewed by Author on September 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.