24 மணித்தியாலங்களில் இடம் பெற்ற இரு கொலைச் சம்பவங்கள்!
குறித்த நபர் மேலும் இருவருடன் மது அருந்திய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இருவர் மரக் கம்பத்தால் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இடம் பெற்ற சம்பவம்
இதேவேளை, இன்று அதிகாலை திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மற்றொரு குழுவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
24 மணித்தியாலங்களில் இடம் பெற்ற இரு கொலைச் சம்பவங்கள்!
Reviewed by Author
on
September 16, 2022
Rating:

No comments:
Post a Comment