24 மணி நேரத்தில் விபத்துகளில் சிக்கி நால்வர் பலி
கடவத்தை – கணேமுல்ல வீதியில் வெலிப்பிள்ளேவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் சீதுவ நகரில் நேற்று முன்தினம் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான பயணி சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை – பண்டாரவளை வீதியில் ஹல்பே பிரதேசத்தில், மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் பயணித்த முச்சக்கரவண்டி எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் நேற்று உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டதை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
24 மணி நேரத்தில் விபத்துகளில் சிக்கி நால்வர் பலி
Reviewed by Author
on
October 29, 2022
Rating:

No comments:
Post a Comment