தனது மனைவியின் சகோதரியான மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வந்தனர்.இந்த நிலையில் குறித்த மாணவியின் மூத்த சகோதரியின் கணவர் குறித்த சிறுமி யை தாராபுரம் கிராமத்தில் உள்ள பிரிதொரு வீட்டில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்தது.
-சுமார் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட தாக தெரியவந்துள்ளது.
-குறித்த மாணவி தடுத்து வைக்கப்பட்ட வீட்டிற்கு இருவர் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் 3 நாட்களின் பின்னர் குறித்த மாணவி வீடு சென்ற நிலையில்,வீட்டுக்குச் சென்ற பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.
சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தனது சகோதரியின் கணவரால் தான் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட தாகவும்,மேலும் இருவர் உடந்தையாக இருந்தமையை குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
-மேலும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மை தெரிய வந்துள்ளது.
-குறித்த சம்பவம் தொடர்பில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் சகோதரியின் கணவர் மற்றும் ஏனைய இருவரையும் பொலிஸார் தேடி வந்தனர்.
-இந்த நிலையில் குறித்த சிறுமியின் சகோதரியின் கணவர் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (27) முன்னிலையானார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தனது மனைவியின் சகோதரியான மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
Reviewed by Author
on
October 27, 2022
Rating:
Reviewed by Author
on
October 27, 2022
Rating:



No comments:
Post a Comment