அண்மைய செய்திகள்

recent
-

15 வயது மணமகளுக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி!

மொரட்டுவை அங்குலான திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மணமகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த திருமணம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதன்படி, பதின்ம மணமக்கள், திருமண ஆடையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மணப்பெண்ணுக்கு 15 வயது 6 மாதங்கள் என்றும் மணமகனுக்கு 19 வயது என்றும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த இளைஞனை பொலிசார் கைது செய்ததுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


15 வயது மணமகளுக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி! Reviewed by Author on October 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.