மன்னார் பேசாலையில் கடலில் மூழ்கி இளைஞர் மாயம்!
பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (31) பதிவு செய்யப்பட்ட இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடலில் மூழ்கி காணாமல்போனவர் பேசாலை, காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார்.
காணாமல்போன இளைஞர் மற்றொரு நபருடன் படகில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், காணாமல்போன இளைஞரைக் கண்டறியும் பணிகளை முன்னெடுத்து வரும் பேசாலை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
August 01, 2026
Rating:


No comments:
Post a Comment