UAE அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
இதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்ப்பில் கார்த்திக் மெய்யப்பன் ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 11 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
UAE அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
Reviewed by Author
on
October 18, 2022
Rating:

No comments:
Post a Comment