மூன்று மாவீரர்களின் தாயாரான அமரர் ச.சரஸ்வதி அம்மா ஓராண்டு நினைவாக தீவகத்தில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு போட்டி
சிறப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டுக்கழக தலைவர் மு.முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.விழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசாவும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரான ந.விந்தன் கனகரட்ணம்,யாழ் பல்கலைக்கழக உடற் கல்வி விரிவுரையாளர் மா.இளம்பிறையன்,ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு மாவை சேனாதிராசா,விந்தன் கனகரட்ணம் ஆகியோரின் சிறப்புரையும் இடம் பெற்றன,மேலும் நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக ஜே/19 வேலணை பிரிவு கிராம அலுவலகர்,தி.கோகுலரூபன்,ஜே/18 வேலணை பிரிவு கிராம அலுவலகர் வ.கோகுலதாஸ்,திரு வேல்முருகன்(தலைவர் குடிநீர் வழங்கல் சபை அம்பிகை நகர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்,நிகழ்வின் அழைப்பாளர்களால் விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு விளையாட்டு தொடரில் முதலாம் இரண்டாம் இடத்தினை வென்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் பரிசுகளையும் பதக்கங்களையும் அணி வீரர்களுக்கு விருந்தினர் வழங்கி வைத்ததோடு விளையாட்டுகளின் தொடரின் சிறந்த வீரர்,சிறந்த கோல் காப்பாளர் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டு விருந்தினரால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.மேலும் குறித்த விளையாட்டு நிகழ்வில் சமூக சேவையாளரும் வேலணை பிரதேசசபை உறுப்பினருமான க.நாவலன்,ஊர்காவற்துறை பிரதேசசபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிற்(சின்னமணி) அ.கனகையா,சமூக சேவையாளர்களும் முன்னாள் போராளிகளுமான குயிலன்,தனு, ஆகியோருடன் ஏராளமான பொது மக்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
மூன்று மாவீரர்களின் தாயாரான அமரர் ச.சரஸ்வதி அம்மா ஓராண்டு நினைவாக தீவகத்தில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு போட்டி
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment