நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 450 திமிங்கலங்கள்
நியூசிலாந்தின் சதாம் மற்றும் பிட் தீவுகள் அதிகளவில் திமிங்கலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகின்றன. சாத்தம் தீவில் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி சுமார் 215 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாளே அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. மொத்தமாக 455 திமிங்கலங்கள் இறந்துள்ளன. இவ்வளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பிறகு உயிரோடு இருக்கும் பட்சத்தில் அதனை மீண்டும் கடலில் மிதக்க விடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சதாம் மற்றும் பிட் தீவுகளில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அப்படியே கடந்த சில நாட்களாக கிடக்கின்றன. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் குறைவான மக்கள் வசிக்கும் அந்த தீவில் தளவாடப் பிரச்சினைகளைத் தவிர, அவற்றை மீண்டும் நீரில் மிதக்கச் செய்தால், சுறாக்கள் அவற்றை உணவாக்கிக் கொள்ளக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக கடல் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்ப ஆலோசகர் டேவ் லுண்ட்கிஸ்ட் தெரிவித்தார். இருப்பினும் திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்கி இறப்பதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
கடலின் ஆழமான பகுதிகளில் உயிர் வாழும் வெள்ளை சுறாக்கள் மிகவும் ஆபத்தானவை. இத்தகைய சுறாக்களால் மற்ற மீன் வகை உயிரினங்களுக்கு அதிக அளவில் ஆபத்து நிலவுகிறது. இவைகளில் வேட்டையாடும் தன்மையால் கொலையாளி திமிங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்தகைய சுறாக்களினால் தான் திமிங்கலங்களின் வாழ்வியல் பாதிக்கப்படுவதாக உயிரியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”
நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 450 திமிங்கலங்கள்
Reviewed by Author
on
October 13, 2022
Rating:

No comments:
Post a Comment