மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சமாச கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர்.
அருகாமையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சமாச கட்டிடம் மிகவும் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்ற நிலையில் மன்னாரிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) விஜயம் மேற்கொண்டு வருகைதந்த வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் குறித்த கட்டிடத்தை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேலின் கோரிக்கைக்கு அமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மதியம் குறித்த பகுதிக்குச் சென்ற வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் குறித்த கட்டிடத்தை நேரடியாக பார்வையிட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட அமைச்சர் குறித்த கட்டிடத்தை முழுமையாக அகற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதன் போது குறித்த பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இ மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் உற்பட திணைக்கள தலைவர்கள் சென்றிருந்தனர்.
-குறித்த கட்டிடம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பல தடவை சுட்டிக்காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது..
மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சமாச கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர்.
Reviewed by Author
on
November 06, 2022
Rating:

No comments:
Post a Comment