அண்மைய செய்திகள்

recent
-

இறுதிப்போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்!

2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரை இறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெற்றிக்கொண்ட பாகிஸ்தான் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடத்தை தெரிவுசெய்தார். முதலில் துடுப்பாடிய அந்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. 

 இதில் டெரில் மிச்செய்ல் 53 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களையும் பெற்றனர். 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, ஓவர்களில் இலக்கை அடைந்தது. வேகமான துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பாபர் அஸாம் – மொஹமட் ரிஷ்வான் ஜோடி, 100 ஓட்ட இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தது. இந்த நிலையில், 12.5 ஓவர்களில் 105 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்ட நிலையில் 42 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றிருந்த பாபர் அசாம் நியூஸிலாந்து அணி களத்தைவிட்டு வெளியேறச்செய்தது. அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொஹமட் ரிஷ்வான் 16. 5 ஓவர்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றார். நியூஸிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ட்ரென் போல்ட விக்கெட்டுகளை பெற்றார். இந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

 நாளைய தினம் இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 13 ஆம் திகதி மெல்பர்னில் இடம்பெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். இறுதிச் சமரில் பாகிஸ்தானை சந்திக்கப்போவது இந்தியாவா அல்லது இங்கிலாந்தா என்ற கேள்விக்கு நாளை மாலை விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


.
இறுதிப்போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்! Reviewed by Author on November 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.