தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம்-மன்னார் வைத்தியசாலையில் அனுமதி.
இந்திய மீனவர்கள் 15 பேர் இரண்டு படகில் நேற்று சனிக்கிழமை(5) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்,நேற்று சனிக்கிழமை(5) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,இன்று ஞாயிற்றுக்கிழமை(6) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-தலைமன்னார் கடற்படையினர் குறித்த 15 இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது திடீர் சுகயீனம் அடைந்த ராமமூர்த்தி குமார வடிவேல்(வயது-29) மற்றும் வினோத் கஜேந்திரன் (வயது 32) ஆகிய இரு மீனவர்களும் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய 13 இந்திய மீனவர்களும் கடற்படையினரின் விசாரணைகளின் பின் இன்று மாலை 6 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளனர்.
குறித்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம்-மன்னார் வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by Author
on
November 06, 2022
Rating:

No comments:
Post a Comment