ஜனாதிபதி ரணில் – ஐ.நா செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு
சர்வதேச நாடுகள் எதிர்நோக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இடம்பெறும் மாநாட்டில் நாளையும்(07) நாளை மறுதினமும்(08) கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இதற்கு இணையாக சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாடு மற்றும் உலகத் தலைவர்களின் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
பரிஸ் உடன்படிக்கை மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைவாக காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
கடந்த வருடம் ஸ்கொட்லாந்தின் Glasgow நகரில் நடைபெற்ற COP 26 மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட பரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இம்முறை மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, சர்வதேச வர்த்தகத்தின் போட்டித்தன்மைக்கு பொருந்தும் வகையில் உள்நாட்டில் விசேட வர்த்தக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய வர்த்தக குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் – ஐ.நா செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு
Reviewed by Author
on
November 06, 2022
Rating:

No comments:
Post a Comment