தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை
அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது கிரிக்கெட் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அந்தச் சபையின் தலைவர் ஷம்மி த சில்வா தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை
Reviewed by Author
on
November 07, 2022
Rating:

No comments:
Post a Comment