ராமேஸ்வரம் மீனவா்கள் 15 போ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பு.
அந்தக் கூட்டத்தில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடா்ந்து கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், படகுகள், மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதன் பின் அடுத்தகட்டப் போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள்.
இதனால், இன்று திங்கட்கிழமை காலை மீன்பிடிக்கச் செல்லவில்லை.இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கிறார்கள்
மேலும்,நாள் ஒன்றுக்கு 5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் மீனவா்கள் 15 போ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பு.
Reviewed by Author
on
November 07, 2022
Rating:

No comments:
Post a Comment